ஆளுங்கட்சி மின்வாரிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தலை ஆறு மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், மீண்டும் தேர்தல் நடத்தப்படாமல் பதவியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதி சங்க நிர்வாகியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.இதையும் படியுங்கள் : ஜெயின் ஆன்மீக தலைவர் நூற்றாண்டு விழாவில் மோடி..