ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்கிய ராணுவ கர்னல் சோபியா குரேசியை பாகிஸ்தானியர்களின் சகோதரி என குறிப்பிட்ட மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், பஹல்காமில் தமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளதாக பேசினார்.