news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home election-express கண்டென்ட் இல்லாமல் கண்டபடி பேச்சு - முதல்வர் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

கண்டென்ட் இல்லாமல் கண்டபடி பேச்சு - முதல்வர் விமர்சனம்

திமுக கூட்​ட​ணியை மக்​கள் ஆதரிக்க வேண்​டும்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பேசுவதற்கு கண்டெண்ட் இல்லாமல் கண்டதையும் பேசி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை ஏலம் எடுத்து முதலமைச்சர் ஆனவரை அரசியலில் இருந்தே தூக்கி எறிய வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

சீர்காழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சீர்காழியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
பல்​வேறு மக்​கள் நலத் திட்​டங்​களை தேர்​தல் அறிக்​கை​யில் அறி​வித்​து உள்​ளோம். முதலில் இல்​லத்​தரசி திட்​டம். முதல் பந்தே சிக்​சர்​ தான். இல்​லத்​தரசி திட்​டத்​தில் எவ்​வளவு ரூபாய்க்கு கூப்​பன் தரப்​போகி​றோம். எவ்​வளவு? எட்​டா​யிரம் ரூபாய்க்கு கூப்​பன். இந்​தக் கூப்​பனை வைத்​து, உங்​களுக்​குத் தேவைப்​படும் வீட்டு உபயோகப் பொருளை, புதி​தாக​வும் வாங்​கிக் கொள்​ளலாம்; இல்லை என்​றால், பழைய பொருளை எக்​ஸ்​சேஞ்ச் செய்து புது பொருளை​யும் வாங்​கிக் கொள்​ளலாம். உங்​களுக்​குப் பிடித்த கடை​யில், உங்​களுக்​குப் பிடித்த பிராண்டை வாங்​கிக் கொள்​ளலாம். என்​னென்ன பொருள்? வாஷிங் மெஷின், ஃபிரிட்​ஜ், டி.​வி. கிரைண்​டர், மிக்​சி, மைக்​ரோ-வேவ் அவன், மின் அடுப்பு – இதில் எதை வாங்​கலாம் என்று இப்​போதே பெண்​கள் எல்​லாம் ஆலோ​சனை செய்ய ஆரம்​பித்​து​ விட்​டார்​கள். என்​னைப் பொறுத்​தவரை, நம்​முடைய குடும்​பத் தலைவி​களின் வீட்டு வேலை சுமை குறைய வேண்​டும். அதற்​காகத்​தான் இந்​தத் திட்​டம்.

கண்டென்ட் இல்லாமல் கண்டபடி பேச்சு
எப்​படி கருணாநிதி சொன்​னபடியே கலர் டிவி​யும், கேஸ் அடுப்​பும் கொடுத்​தா​ரோ? அவரது மகனான நானும், சொன்​னபடியே இல்​லத்​தரசி திட்​டத்தை நிறை​வேற்​று​வேன். தமி​ழ​கத்​தில் பல்​வேறு சாதனை​கள், அனை​வ​ருக்​கும் நன்​மை​களை செய்து தந்​து​விட்​டு, கம்​பீர​மாக, தெம்​புடன், திராணி​யுடன் உங்​களிடம் நான் ஆதர​வைக் கேட்​கிறேன். ஆனால், இப்​படி பேசுவதற்கு எந்​த கண்ட்​டென்​டும் இல்​லாமல், கண்​டதை​யும் பேசும் ஒரு எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக பழனி​சாமி வலம் வந்து கொண்​டிருக்​கி​றார். நாள்​தோறும் கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் எல்​லாம் வந்து கொண்​டிருக்​கிறது அல்​ல​வா, அதில், தி.​மு.க. கூட்​ட​ணி​யின் வெற்றி எண்​ணிக்கை கூட, தோல்வி பயத்​தில் பழனி​சாமி​யின் தரம் கீழே கீழே இறங்​கிக் கொண்டே போகிறது.

திமுக கூட்​ட​ணியை மக்​கள் ஆதரிக்க வேண்​டும்
தொகுதி மறு​வரையறை​யில் தமிழ்​நாட்​டுக்​காக குரல் கொடுக்​காத பழனி​சாமி, வேறு எதற்​காகத்​ தான் பேசு​வார்? தமிழ்​நாட்​டில் தி.​மு.க. ஆட்​சி​யில் இருப்​ப​தால்​ தான், தொகுதி மறு​வரையறை பற்றி பா.ஜ.க. அரசு அறி​விப்​ப​தற்கு முன்பே விழிப்​புணர்வை நாம் ஏற்​படுத்​தினோம்.

நடை​பெறப் போகும் தேர்​தல் டெல்லி அணிக்​கும் தமிழ்​நாடு அணிக்​கு​மான தேர்​தல். இந்த தேர்​தலில் திமுக கூட்​ட​ணியை மக்​கள் ஆதரிக்க வேண்​டும். இவ்​வாறு பேசி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Related Link
போர் நிறுத்தம், தேர்தல் பிரச்சாரம், வெப்பநிலை - இன்றைய முக்கிய செய்திகள்

போர் நிறுத்தம், தேர்தல் பிரச்சாரம், வெப்பநிலை - இன்றைய முக்கிய செய்திகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொகுதி மறுவரையறை, சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா? - ஸ்டாலின் கேள்வி

3
10 mins agoshare
முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்விbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved