விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் இயற்கை உணவின் அவசியத்தை வலியுறுத்தி காய் மற்றும் கனிகள் மீது அமர்ந்து யோகாசனங்களை செய்தனர். ராஜபாளையம் பாரதி நகரில் யுனைடெட் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் காய் மற்றும் கனிகள் மீது அமர்ந்து பத்மாசனம், பர்வதாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர். மூன்று சுற்றுகளாக யோகாசனங்களை செய்துக்காட்டிய மாணவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.