news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காலை முதலே களைகட்டும் ஏற்காடு சுற்றுலாத் தலம்
tv

Also Watch

tv

Read this

காலை முதலே களைகட்டும் ஏற்காடு சுற்றுலாத் தலம்

Yercaud

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஏற்காடு , சேலம்

களைகட்டும் ஏற்காடு சுற்றுலாத் தலம் :

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறையில் உள்ளன.

தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தில் இருந்து, தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் குளுகுளு சுற்றுலாத் தலங்களுக்கு வருவதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இதனால், சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு கடந்த சில வாரங்களாக, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இன்று காலை முதல் ஏற்காட்டில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை குவிந்து  அண்ணா பூங்கா, ஏரிப்பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத்தோட்டம் என பூங்காக்கள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளை குடும்பம் குடும்பமாக காண முடிகிறது.

சேர்வராயன் கோயில், மஞ்சக்குட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் மிகுந்திருந்தது. ஏற்காடு மலையில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Link
கேட்டை தள்ளிவிட்டு உள்ளே சென்ற பக்தர்கள்

கேட்டை தள்ளிவிட்டு உள்ளே சென்ற பக்தர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

1
7 mins agoshare
ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved