news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு சலுகை அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு சலுகை அறிவிப்பு

மெட்ரோ ரயில்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐபிஎல் லீக் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் அணிகள் மோதல் :

சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், IPL போட்டிக்கான பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள், QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சிறப்பு சலுகை 2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதலுக்கு பயன்படுத்தலாம் எனவும், எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் சேப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு இடையே எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பந்தை தடுக்க முயன்ற பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி :

வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி பந்தை தடுக்கும் முயன்ற போது அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் சைல்ஹெட்டில் தொடங்கியது.

இதில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. அப்போது வங்கதேசம் அணி வீரர் அடித்த பந்தை, பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி 126 ரன்கள் விளாசல்  :

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் சிலெட்டில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய வங்கதேசம் 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி சதமடித்து, 126 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்த்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா அபார வெற்றி :

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதி போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் மற்றும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் மோதினர்.

இதில், முதல் செட்டை 6-க்கு 4 என கைப்பற்றிய ஸ்விடோலினா, 2-வது செட்டை 2-க்கு 6 என இழந்தார். தொடர்ந்து நடைபெற்ற வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் எழுச்சி கண்ட ஸ்விடோலினா 6-க்கு 2 என வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் கோகோ காஃப், ஸ்விடோலினா மோதுகின்றனர்.

ஜானிக் சின்னர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் :

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மற்றும் ரஷியாவின் மெத்வதேவ் ஆகியோர் மோதினர்.

இதில் முதல் செட்டை 6-க்கு 2 என சின்னர் கைப்பற்றினார். பதிலடியாக 2-வது செட்டை 7-க்கு 5 என மெத்வதேவ் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் 4-க்கு 2 என சின்னர் முன்னிலை பெற்றபோது, மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டது. இதையடுத்து, மறுநாள் நடைபெற்ற 3-வது செட்டில் சின்னர் 6-க்கு 4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Related Link
சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்

சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக பெண்களுக்கு எதிராக பொன்ராஜ் சர்ச்சை பேச்சு

1
23 mins agoshare
Ponrajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved