news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news உண்மையான சிறுத்தை பல் பதித்த செயின்தான் என்பது உறுதி
tv

Also Watch

tv

Read this

உண்மையான சிறுத்தை பல் பதித்த செயின்தான் என்பது உறுதி

வேடன்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வேடனுக்கு சிக்கல்

செயின் விவகாரத்தில் பிரபல ராப் பாடகர் வேடனுக்கு சிக்கல்:

பிரபல ராப் பாடகர் வேடன் அணிந்திருந்தது உண்மையான சிறுத்தை பல் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மீது வழக்கு தொடரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. போதைப் பொருள் விவகாரத்தில் வேடன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் கடந்த ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, வேடன் அணிந்திருந்த சிறுத்தை பல்லுடன் கூடிய செயின் விவகாரம் சர்ச்சையானது. எனவே, உண்மைத்தன்மையை உறுதி செய்ய கொல்கத்தாவில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், வேடன் அணிந்திருந்ததது உண்மையான சிறுத்தை பல்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை :

தாம் சினிமாவில் இருந்து விலகி இருந்த காலகட்டத்தில் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படங்கள் அதிகம் வரவில்லை என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். மேலும், பெண் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பட்ஜெட் கிடைப்பதில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், 8 ஆண்டுகளுக்கு தாம் "36 வயதினிலே" திரைப்படத்திலும், நடிகை நயன்தாரா "மாயா" திரைப்படத்திலும் நடித்ததாக தெரிவித்துள்ளார். 2 படங்களும் வெற்றிகரமாக ஓடியதாகவும், அது போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் போது அக்னி பரிட்சையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சேயோன் கதைக்கு எனது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது  :

"சேயோன்" திரைப்படத்திற்காக தமிழ் கற்று வருவதாக நடிகை பாக்யாஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார். "சேயோன்" படத்தை பற்றி இப்போதைக்கு அதிகம் சொல்ல முடியாது எனவும், ஆனால், அந்த படத்தின் கதைக்கு தனது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த திரைப்படம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்களுக்கு காட்டும் எனவும், ரசிகர்களுடன் உண்மையாக இணைப்பில் இருக்க வேண்டும் என்றால், நாம் நடிக்கும் மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், இதற்காக தற்போது தீவிரமாக தமிழ் கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

"கருப்பு" திரைப்படம் வெற்றி: உணர்ச்சி பொங்க சூர்யா வீடியோ :

"கருப்பு" திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கண்ணுகளா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா... எனத் தொடங்கி, இந்த அன்புக்கு என்ன வார்த்தை சொல்றதுன்னு தெரியல என உணர்ச்சி ததும்ப பேசியுள்ளார்.

மேலும், "கருப்பு" திரைப்படத்திற்கு கொடுத்திருக்கிற இந்த மரியாதைக்கும், வரவேற்புக்கும் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது எனவும், தனது அன்பான ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் எனவும் தெரிவித்துள்ளார்.

இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி" என எக்ஸ் பதிவு :

"சண்டை போடாத ஜோடியே இல்லைன்னு சொல்லுவாங்க, இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி" என குறிப்பிட்டு, விஷ்ணு விஷால் நடிக்கும் "கட்டா குஸ்தி - 2" திரைப்படத்தின் 2-வது போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் 2022-ல் வெளியான "கட்டா குஸ்தி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 2-வது பாகம் எடுக்கப்பட்டு சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஜூலை 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
கேன்ஸ் விழாவில் கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!

கேன்ஸ் விழாவில் கலக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

1
54 mins agoshare
ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved