news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கிய வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கிய வீரர்கள்

பொன்னமராவதி, புதுக்கோட்டை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜல்லிக்கட்டு போட்டி

போட்டுக்கொண்டு காளைகளை அடக்கிய வீரர்கள் :

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ராங்கியம் பெரியகண்மாயில் அழகிய நாஞ்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 200 காளைகளும் 50மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளன.

இந்த ஜல்லிகட்டு போட்டி 2சுற்றுகளாக நடைபெற உள்ளது வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வந்ததை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி தழுவி வருகின்றனர்.இதனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடிய காளைகளுக்கும் சில்வர் பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது

காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது.மேலும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சுகாதாரத்துறை கால்நடைத்துறை வருவாய்த்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

Related Link
அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் நெரிசல்

அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் நெரிசல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

1
49 mins agoshare
ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved