Also Watch
Read this
By: Manigandan Raja

நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம் :
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட 29வது வார்டு பகுதியான பாப்ஷா லைன் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடியது.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்தனர். ஆனால் 15 நாட்கள் ஆகியும் நகராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் இல்லை என கூறி அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியதாகவும்.
குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி இன்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி நகர மன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சீரமைத்து தருவதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved