தூத்துக்குடி... ஆட்டோவில் சென்று கொண்டிருந்த அசாம் மாநில தம்பதி. வழிமறித்து காட்டுக்குள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம். கட்டிய கணவன் முன்னே சீரழிக்கப்பட்ட மனைவி. கல்குவாரியில் வாங்கிய கமிஷன் தொகைக்காக சொந்த ஊர்க்காரனே அத்துமீறல். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சிக்கினார்களா? நடந்தது என்ன?அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியோட போயிட்டு இருந்த ஆட்டோவை, ரெண்டு சிறுவர்களோட பைக்ல வந்த ஒரு இளைஞர் வழிமறிச்சிருக்கான். இந்த தம்பதி ஒரு கல்குவாரியில வேலை பாத்ததாகவும், அங்க பணத்த திருடிட்டி எஸ்கேப் ஆகுறதாகவும் ஆட்டோக்காரர்கிட்ட சொல்லிருக்கான் அந்த இளைஞன். நமக்கு எதுக்கு வம்பு? திருட்டு வழக்கு சம்மந்தமா கோர்டுக்கு போறதெல்லாம் நமக்கு தேவையானு நினைச்ச ஆட்டோக்காரரும் அந்த தம்பதியை சிவந்திப்பட்டி பக்கத்துலயே இறக்கிவிட்டுட்டு போய்ட்டாரு. அடுத்து, அந்த தம்பதியை மிரட்டி பக்கத்துல உள்ள காட்டுப்பகுதிக்கு அழைச்சிட்டுப்போன இளைஞனும், சிறுவர்களும் கணவன் முன்னாலேயே அவர் மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை பண்ணிருக்காங்க. எங்களை மீறி, என்ன செய்ய நினைச்சாலும் இப்படிதான் நடக்கும்னு மிரட்டுன இளைஞனும், சிறுவர்களும் பலமணிநேரத்துக்குப் பிறகு அந்த தம்பதியை அங்க உள்ள ரோட்டுல விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க. அழுதுட்டு இருந்த பொண்ண மீட்ட அவ்வழியா போன பொதுமக்கள், நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வச்சிருக்காங்க.அதுக்குப் பிறகு தகவல் தெரிஞ்சி அங்கபோன ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பொண்ணுக்கிட்டயும், அவங்களோட கணவர்கிட்டயும் விசாரிச்சிருக்காங்க. அப்பதான், கூட்டு பாலியல் வன்கொடுமை பண்ணின 3 பேரும் யாரு? ஏன் ஆட்டோவ வழிமறிச்சி தம்பதிய மிரட்டினாங்க அப்படிங்கிற எல்லா கேள்விகளுக்குமே விடை கிடைச்சது. தூத்துக்குடி மாவட்டத்துல உள்ள கல் குவாரிகள், செங்கல் சூளைகள்ல வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பாத்துட்டு இருக்காங்க. அதுலயும் சிலர் குடும்பத்தோடவே தங்கி வேலை பாக்குறாங்க. அப்படி தான், அரசர்குளம் பகுதியில உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கல்குவாரியில ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, ஒரு அசாம் மாநில தம்பதி வேலைக்கு சேந்துருக்காங்க.இந்த தம்பதியை அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன்ங்குற 27 வயசான இளைஞன்தான் கல்குவாரியில வேலைக்கு சேத்து விட்ருக்கான். நெல்லையில தங்கி இருக்குற முகமது மஹ்புல் ஹுசைன், அந்த தம்பதியை வேலைக்கு சேர்த்து விட்டப்ப கல்குவாரி ஓனர்கிட்ட கமிஷன் தொகை வாங்கினதா தெரியுது. ஆனா, ரெண்டு வாரத்துக்குமேல அந்த தம்பதியால கல்குவாரி வேலையை செய்ய முடியல. தங்கி இருந்த இடத்துல போதிய அடிப்படை வசதிகள் இல்லாததோட, சம்பளமும் குறைவா இருந்ததால அந்த தம்பதி கேரளாவுக்கு வேலைக்கு போகலாம்னு முடிவெடுத்துருக்காங்க. உண்மையான காரணத்த கல்குவாரி ஓனர்கிட்ட சொல்லிட்டு, அரசர்குளத்துல இருந்து ஒரு ஆட்டோவுல ஏறிருக்காங்க தம்பதி. நெல்லை ரயில்வே ஸ்டேஷன்போய் அங்க இருந்து ரயில் மூலமா கேரளா போகலாம்னு நினைச்சிருக்காங்க. இதுக்குஇடையில, முகமது மஹ்புல் ஹுசைனுக்கு போன் பண்ணி, வாய்க்கு வந்தபடி திட்டுன கல்குவாரி ஓனர், அந்த தம்பதி வேலையைவிட்டு போய்ட்டாங்க, அதனால வாங்கின கமிஷன் தொகையை திரும்ப குடுத்துருனு சொன்னதோட, உருப்படியான ஆட்களை அழைச்சிட்டு வர்றதா இருந்தா கமிஷன் தருவேன், இல்லனா கமிஷனே கிடையாது கறார சொல்லிட்டு போன வச்சிருக்காரு.வாங்கின கமிஷனை செல்வழிச்ச இளைஞனுக்கு கோவம் அசாம் மாநில தம்பதிமேல திரும்பிருக்குது. அதனால, அவங்களுக்கு போன் பண்ணின இளைஞன் மரியாதையா அரசர்குளம் கல்குவாரியிலேயே வேலை பாருங்க, இல்லனா உசுரு மிஞ்சாதுனு மிரட்டிருக்கான். கேரளா போறதுக்கு முன்னால, கொஞ்சம் பேச்சுவார்த்தை நடத்தணும், இல்லனா பெரிய பிரச்சனை பண்ணுவேனு சொன்ன இளைஞர், தம்பதிபோன ஆட்டோவ சிவந்திபட்டி பகுதியில ரெண்டு சிறுவர்களோட சேர்ந்து வழிமறிச்சிருக்கான். அடுத்து, அந்த தம்பதிமேல திருட்டுப்பழிய போட்டு ஆட்டோக்காரரை நைசா விரட்டிவிட்டுட்டு நேக்கா ரெண்டுபேரையும் காட்டுக்குள்ள அழைச்சிட்டு போயிருக்கான்.பேசுனபடி கல்குவாரியில வேலை பாக்க முடியுமானு கேட்டதுக்கு தம்பதி கடைசிவரை சம்திக்கல. அதனால, ஆத்திரத்தோட உச்சிக்குப்போன முகமது மஹ்புல் ஹுசைன் ரெண்டு சிறுவர்களோட சேர்ந்து, அசாம் மாநில கணவனை கண்மூடித்தனமா தாக்கிட்டு, அவர் கண்முன்னாலேயே அவரோட மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை பண்ணிருக்காங்க. அதோட, நடந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அவமானம் உங்க ரெண்டுபேருக்குதான், எங்களுக்கு இல்ல, அத புரிஞ்சிக்கிட்டு அமைதியா ஓடிப்போய்ருங்கனு மிரட்டுன முகமது மஹ்புல் ஹுசைன் ரொம்ப நேரத்துக்கு பிறகு, தம்பதியை சாலையோரம் விட்டுட்டு சிறுவர்களோட எஸ்கேப் ஆகிட்டான். இது சம்மந்தமா வழக்குப்பதிவு பண்ணி விசாரணையில இறங்குன மகளிர் போலீசார், சம்பவம் நடந்த சிலமணி நேரத்துலயே நெல்லை பஸ் ஸ்டாண்டுல வச்சி முகமது மஹ்புல் ஹுசைனை கைது பண்ணிருக்காங்க. அதேமாதிரி, சம்மந்தப்பட்ட சிறுவர்களையும் கைது பண்ணி சீர்திருத்தப்பள்ளியில அடைச்சிருக்காங்க.