news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இபிஎஸ் இரட்டை விரல் காட்டுவது ஏன்? - உதயநிதி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

இபிஎஸ் இரட்டை விரல் காட்டுவது ஏன்? - உதயநிதி விமர்சனம்

புதுக்கோட்டையில் வாக்கு சேகரிப்பு

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்த முறை தேர்தலுடன் 11ஆவது தோல்வி கிடைக்கப் போவதை குறிக்கவே இபிஎஸ் இரட்டை விரலை காண்பித்து வாக்கு சேகரிப்பதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்
புதுக்கோட்டையில் வாக்கு வாக்கு சேகரித்த உதயநிதி பேசியதாவது;
இந்த தேர்தலில், ஆட்சி அமைக்கப் போவது நம்முடைய முதலமைச்சர் தான். மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதிமுக பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை
அதிமுக ஆட்சியில், லேப்டாப் மாணவர்களுக்கு கொடுத்து வந்தது, அதை திமுக ஆட்சி வந்து முடக்கி விட்டனர் என்று பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமை தொகை 2000 ரூபாய் உயர்த்தப்படும், எட்டாயிரம் ரூபாய் அளவிற்கு மின்சாதன பொருட்கள் வாங்கிக் கொள்வதற்கு கூப்பன் வழங்கப்படும்,

கல்லூரியில் படிக்க பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது 1,500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளோம். இந்த திட்டம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் ஆட்சியில் நீங்கள் அமர்த்த வேண்டும்.

மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை
இந்த அளவிற்கு திட்டங்கள் செயல்படுத்தியதால் தான் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்த சாதனைகளை செய்வதற்கு மத்திய அரசு ஏதாவது நிதி அளித்துள்ளதா? துணை நிற்கிறதா மத்திய அரசு? நமக்கு வர வேண்டிய நிதியையே அவர்கள் கொடுக்க மறுக்கின்றனர். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயரே இல்லை, தமிழ்நாட்டை ஒதுக்கும் பாஜகவை தமிழகத்தில் நுழைய விடலாமா? அதிமுக என்ற முகமூடியை, போர்வையை போர்த்திக் கொண்டு தமிழகத்தில் நுழைந்து விடலாம் என்று பாஜக நினைக்கிறது.

முரட்டு அடிமை
இதனால் தான் நாங்கள் கூறுகிறோம். டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் தான் இந்த தேர்தல். மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி. ஏற்கனவே 10 தோல்வியை அவருக்கு அளித்து விட்டோம். இந்த தேர்தலில் மொத்த தோல்வியையும் அவருக்கு கொடுத்துவிட வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி இரட்டை விரலை காட்டி செல்கிறார். ஏற்கனவே என்னை பத்து முறை தோற்கடித்து விட்டீர்கள் 11 முறையாக என்னை தோற்கடித்து விடுங்கள் என்று அவரே கூறி வருகிறார். தமிழகத்தை எப்படியாவது கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்று ரிமோட் கண்ட்ரோல் மூலமாக எடப்பாடியை பாஜக பயன்படுத்தி வருகிறது. என்றைக்கும் தமிழகம் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று நாம் நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு கூறி, உதயநிதி வாக்கு சேகரித்தார்.

Related Link
எம்பி சீட் தருவதாக கூறி மோசடி - பிரேமலதா குற்றச்சாட்டு

எம்பி சீட் தருவதாக கூறி மோசடி - பிரேமலதா குற்றச்சாட்டு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திடீரென மேடையில் ரஜினி பாடலை பாடிய முதல்வர்..!!

1
1 hr 53 mins agoshare
முக ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved