Also Watch
Read this
Posted on: May 14, 2025 12:27 PM
By: Srini Vasan

ஈரோடு காளிங்கராயன் கால்வாயில் இரண்டாம் போக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கால்வாயில் மீன்கள் செத்து கிடக்கின்றன.
பவானி காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காளிங்கராயன் பாசன கால்வாயில் ஆண்டுதோறும் விவசாய பாசனத்திற்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
அந்த வகையில் நடப்பாண்டு இரண்டாம் போகத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இதனால் கால்வாயில் தண்ணீர் இன்றி ஏராளமான மீன்கள் செத்து கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved