தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை பட்டாக் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என அந்த பகுதி மக்கள் வார்டு உறுப்பினர் புகழேந்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது, மது போதையில் அங்கு வந்த பாமக நிர்வாகி எல்லப்பன், வார்டு உறுப்பினர் புகழேந்தியிடம் தகராறு செய்ததோடு, பட்டா கத்தியை எடுத்து வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், எல்லப்பனை காவல்துறையினர் கைது செய்தனர்.