Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் வில்லரம்பட்டி அருகே சோப் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மொக்கையாம்பாளையம் பகுதியில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சோப் ஆயில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நிலைகளில் கலப்பதால், நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved