சென்னை எழும்பூரில் உள்ள கோஆப்டெக்ஸ் வளாகத்தில் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் யூனிட்டி மால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக அதன் கொள்கைவிளக்க குறிப்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிராமப்புற கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யவும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் எழும்பூரில் கோஆப்டெக்ஸ் யூனிட்டி மால் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.