மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த நண்பர்களான ரஞ்சித், முரளி, அருண்குமார் ஆகியோர் முட்புதர் பகுதியில் மது அருந்தியதாக தெரிகிறது.இதில் ரஞ்சித் வீடு திரும்பாத நிலையில் புகாரின் பேரில் போலீசார் முரளி, அருண்குமார் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பன் ரஞ்சித்தை அடித்து கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததோடு, முட்புதரின்ல் உடலை வீசிச்சென்றதாக ஒப்புக்கொண்டனர்.