கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலியானார். சங்கராபுரம் நோக்கி கேடிஎம் பைக்கில் சரத் என்பவர் அதிவேகமாக மேலேரி கிராமத்தில் சென்றபோது, அதே சாலையை டிவிஎஸ் இருசக்கரவாகனத்தில் குமார் என்பவர் கடக்க முற்பட்டார். இதில் இரண்டு இருசக்கர வாகனங்களும் மோதிக்கொண்டு விபத்தானதில் கேடிஎம் பைக்கில் சென்ற சரத் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இதையும் படியுங்கள் : வீட்டுக் கடனை செலுத்த தவறிய கல் உடைக்கும் தொழிலாளி... சுவரில் வீடு விற்பனைக்கு என்று எழுதிய தனியார் நிதி நிறுவனம்