news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் மஞ்சள் அறுவடை மும்முரம்
tv

Also Watch

tv

Read this

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் மஞ்சள் அறுவடை மும்முரம்

கோபிசெட்டிபாளையம், ஈரோடு

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GCP ERD

மஞ்சள் அறுவடை மும்முரம் :

மஞ்சள் சாகுபடியின்போது இலை கருகல், கிழக்கு வேர் அழுகல் நோயால் போதிய விளைச்சல் இல்லாத்தால் விவசாயிகள் கவலை. 10ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சளின் விலை உயர்வு இல்லாததால் வரும் காலங்களில் மஞ்சள் சாகுபடி செய்வது குறையும்.

தமிழக அரசு மஞ்சளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து மஞ்சள் விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நாகதேவம்பாளையம்,

மணியகாரன்புதூர், வெள்ளாளபாளையம், நஞ்சைகோபி, பொலவக்காளிபாளையம், புதுக்கரைபுதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டிற்கான மஞ்சள் சாகுபடியை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிடிஎஸ்10, ராஜமுந்திரி, உள்ளிட்ட நாட்டு ரக விதை மஞ்சளை கொண்டு . ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் கிலோ வரை விதைமஞ்சளை விலைக்கு பெற்று மஞ்சளை நடவு செய்து சாகுபடியை தொடங்கினர்.

மஞ்சள்சாகுபடி பணிகளை விவசாயிகள் முழுவீச்சில் மேற்கொண்டு மஞ்சள் பயிருக்கு கழை எடுத்து மருந்து தெளித்து உரமிட்டு கடந்த மாதம் அறுவடைக்கு தயராகி கடந்த சில நாட்களாக கோபி பகுதியில் முழுவீச்சில் மஞ்சள் அறுவடை செய்து வருகின்றனர்.

இதற்க்காக விவசாய கூலி ஆட்களை கொண்டு மஞ்சள் அறுவடை செய்து விரளி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என தனிதனியாக பிரித்து அறுவடை செய்து வருகின்றனர் சாகுபடியின்போதி மழை பொய்த்து போனதால்.

இலைகருகல் நோயும் பருவம் தவறி அக்டோபர் மாதங்களில் பெய்த மழை மற்றும் பனியால் மஞ்சளில் கிழங்கு அழுகுகல் நோய் தாக்கியது இதனால் மஞ்சள் சாகுபடியில் போதிய விளைச்சல் இன்றி குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஏக்கர் ஒன்றூக்கு 1200கிலோ விதைமஞ்சள் விலைக்கு வாங்கி கூலி ஆட்கள் மூலம் நடவு செய்து மருந்து உரம் தெளித்து மஞ்சளை அறுவடை செய்து பதப்படுத்தும் வரை என மூதலீட்டு செலவு 3இலட்சம் வரை செலவாகிறது.

இந்தாண்டு மஞ்சள் சாகுபடியில் அறுவடை செய்ததில் மஞ்சள் போதிய விளைச்சல் இல்லாத்தால் ஏக்கர் ஒன்றுக்கு 20 முதல் 25 குவிண்டால் வரை மட்டுமே விளைச்சல் உள்ளது மஞ்சளின் விலை ஒரு குவிண்டால் 12ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஒரு சவரன் நகையும் ஒரு குவிண்டால் மஞ்சளும் ஒரே விலைக்கு விற்பனையானது ஆனால் கடந்த 15 வருடங்களாக மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை ஆனால் தற்போது தங்கத்தின் விலை ரூ.1இலட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்பட்டாத்தால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி குறைந்து வருகிறது இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் மஞ்சளை சாகுபடி செய்யவே விவசாயிகள் முன்வரமட்டார்கள் என்பதால் அரசு மஞ்சளுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
ரூ.1.5 கோடி சொத்து அபகரிப்பு - அதிமுக நிர்வாகி கைது

ரூ.1.5 கோடி சொத்து அபகரிப்பு - அதிமுக நிர்வாகி கைது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

1
17 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved