தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே முல்லை பெரியாற்றில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு திரும்பிய வழியில், டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மறவபட்டியில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலையை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் டிராக்டரில் எடுத்து சென்று சின்னமனூர் மார்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் கரைத்து விட்டு திரும்பி வந்தனர்.சிந்தலைசேரியிலிருந்து லட்சுமி நாயக்கன்பட்டி வழியாக வந்த போது, பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் பின்னால் டிப்பரில் அமர்ந்து வந்த விஷால், கவி கிஷோர், நிவாஸ் ஆகிய சிறுவர்கள் மூவரும் பரிதாபமாக பலியாகினர்.