கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி கொள்முதல் விலை சரிந்ததால், சாகுபடிக்கு செலவு செய்த பணம் கூட மிஞ்சாமல் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையான தக்காளி, படிப்படியாக விலை குறைந்து தற்போது 10 முதல் 15 ரூபாய் வரையும், 8 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 100 ரூபாய் வரையே விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். விளைச்சல் அதிகரித்தபோதும், வெளி மாநில வியாபாரிகள் வராததால் விற்பனை குறைந்து, தக்காளி விலை சரிந்ததாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : கோபாலபுரம் கெங்கை அம்மன் கோவில் பால்குட ஊர்வலம் ஆனி மாத கடைசி வெள்ளியில் பக்தர்கள் நேர்த்திக்கடன்..!