வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோபாலபுரம் அருள்மிகு கெங்கை அம்மன் கோவிலில், ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தரணம்பேட்டை முத்தாலம்மன் ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளம், பம்பை முழங்க பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும், பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.