தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்வில் நடராஜர் ஆனந்த நடனமாடினார். இரவு நடராஜ பெருமான் படி இறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தாண்டவ தீப ஆராதனை காட்டப்பட்ட நிலையில், நடராஜ பெருமான் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து ஆனந்த தாண்டவம் ஆடினார்.