தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பகுதியில் இலவசமாக கறி கொடுக்காத ஆத்திரத்தில் மயான பணியாளர் கறிகடை முன் பிணத்தை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயானத்தில் பணியாற்றி வரும் குமார் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும், நிலையில் மணியரசன் என்பவரது கறிக்கடைக்கு சென்ற இலவசமாக கறி கேட்டுள்ளார். மணியரசன் கொடுக்க மறுத்ததால் மயானத்தில் சில நாட்களுக்கு முன் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அதை கடை முன்பு வீசி சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் பிணத்தை மீட்டு மீண்டும் புதைத்தனர்.