நெல்லை மேலப்பாளையம் அருகே டாஸ்மாக் கடையின் கதவை கட்டிங் மெஷினால் வெட்டி எடுத்து, பெட்டி பெட்டியாக விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். 1 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை எடுத்து செல்ல, அருகில் இருந்த ஆட்டோவையும் திருடிச் சென்றனர்.