திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழையால் தேங்கிய சகதியை அகற்றாமல் நடந்த கான்கிரீட் பணியை ரயில்வே அதிகாரி தடுத்து நிறுத்தினார். கம்மியம்பட்டு அருகே சென்னை - ஜோலார்பேட்டை ரயில்வே மார்கத்தில் உள்ள மூன்று கண் பாலம் என்ற ரயில்வே பாலத்தின் அடியில் மழையின் போது சேறும் சகதியுமாக காணப்படுகிறது.