Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 04:15 PM
By: Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வெள்ளம் வடிந்து பல நாட்கள் ஆகியும் பால பணியை தொடங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மங்கலம் கிராமத்திற்கு பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் ஆரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வந்த பாலத்தின் பணிகள், மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பாதியளவு கட்டி முடிக்கப்பட்ட பாலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், பால பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved