சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹூல் (( Murlidhar Mohol ))தெரிவித்தார். விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் நிலை குறித்து வைகோ எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் அவர் பதிலளித்தார்.