வாடகை வீட்டில், ரகசியமாக கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்த டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பருத்தியறை என்ற பகுதியில், வாடகை வீட்டில் தங்கி இருந்த 26 வயதான டீ மாஸ்டர் அஜின் என்பவர் வீட்டில் ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்து பயன்படுத்தி வருவதாக தக்கலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து, அஜின் வீட்டை திடீரென சோதனையிட்ட போது அங்கு செடி தொட்டியில் வளர்ந்த நிலையில் கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அஜினை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் சென்னையில் டீ மாஸ்டராக பணியாற்றிய போது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பின் தனது பயன்பாட்டிற்கு கஞ்சா கிடைக்காததால் தன்னிடம் ஏற்கனவே இருந்த கஞ்சா விதையை வைத்து செடியை வளர்த்து பயன்படுத்தி வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அஜினை கைது செய்து சிறையிலடைத்த தக்கலை போலீசார், கஞ்சா செடியையும் பறிமுதல் செய்தனர்.