Also Watch
Read this
By: Manigandan Raja

சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் :
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகச் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. மலைக்கோயிலில் நடைபெற்ற இந்தப் பணியில், கோயில் அதிகாரிகள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் முன்னிலையில் காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.
இதன் முடிவில், ரொக்கமாக மட்டும் 2 கோடியே 59 லட்சத்து 73 ஆயிரத்து 940 ரூபாய் வசூலாகியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைப் பொறுத்தவரை, 413 கிராம் தங்கம் மற்றும் 9 கிலோ 5 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இது தவிர, 134 எண்ணிக்கையிலான வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் கிடைத்துள்ளன.
விடுமுறை காலத்தை முன்னிட்டுப் பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், குறுகிய கால இடைவெளியிலேயே இந்த அளவிலான காணிக்கை வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எண்ணும் பணி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved