Also Watch
Read this
By: Manigandan Raja

பல சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் :
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாநகராட்சி அலுவலகம் அருகில்,காய்கறி மார்க்கெட் ரோடு. ஜெயராஜ் ரோடு. பூ மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.
ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் அகற்றாததால் நேற்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரப்பு செய்துள்ள வியாபாரிகளிடம் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என்றால் இன்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என தெரிவித்த நிலையில்.
இன்று காலை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின் பெயரில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் காந்திமதி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு அருகில் உள்ள காய்கறி மார்க்கெட் ரோடு, ஜெயராஜ் ரோடு, மற்றும் பூ மார்க்கெட் ரோடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது நாங்கள் எடுக்கிறோம் மேலும் கால அவகாசம் வேண்டும். என்று வியாபாரிகள் கூறினார்கள் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் பல முறை தொடர்ந்து கூறி வருகிறோம் நீங்கள் இன்னும் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பழக்கடை முழு அளவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. மாநகராட்சி பின் பகுதியில் அதிகாரிகள் அகற்றக் முயன்ற போது கடை உரிமையாளர் ஆக்கிரமிப்பு அகற்ற விடாமல் அதிகாரிகளை நீ வா போ என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதுபோல பூ மார்க்கெட் காய்கறி மார்க்கெட் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் முழு அளவில் ஆக்கிரமிப்பில் உள்ளது இதனால் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.மேலும் இந்த பகுதிகளை மாநகராட்சி நிர்வாகிகள் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.
ஆக்கிரமிப்பு அகற்றிய மறுநாளே மீண்டும் அதே பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது தொடர்கதையாகவே இதனையும் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved