news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஏடிஎம் அறைக்குள் சென்று வந்த போது நிகழ்ந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

ஏடிஎம் அறைக்குள் சென்று வந்த போது நிகழ்ந்த சோகம்

கிருஷ்ணகிரி - ஒசூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரூ. 7 லட்சம் கொள்ளை

பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

ஓசூர் அருகே உள்ள சூளகிரி அடுத்துள்ள சென்னப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் டாக்ஸி டிரைவர் ஸ்ரீதர் (48) இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓசூர் மத்திகிரி பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் 85 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஸ்ரீதரும் அவரது மனைவி ஷோபாவும (41) இந்தியன் வங்கியில் அடமானம் வைத்திருந்த தங்க நகையை மீட்க சென்றுள்ளனர் இதற்காக 7 லட்சம் ரூபாய்
பணத்தை காரில் எடுத்து சென்றுள்ளனர் வங்கிக்கு சென்று தங்க நகைகளை மீட்க வட்டி மற்றும் அசல் பணம் குறித்து கேட்டுள்ளனர்.

அப்போது 20 ஆயிரம் ரூபாய் பணம் தேவையாக இருந்துள்ளது அதே நேரத்தில் ஸ்ரீதரின் மனைவி ஷோபா தங்க நகையை மீட்க தேவையான ஆவணத்தை வீட்டில் வைத்து விட்டு வந்ததை
அறிந்து அதனை எடுக்க மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பணம் குறைவாக இருந்த நிலையில் வங்கி முன்புள்ள ஏடிஎம் மையத்திற்கு ஸ்ரீதர் பணம் எடுக்க சென்றுள்ளார் அப்போது நகையை மீட்க தாங்கள் கொண்டு வந்த 7 லட்சம் ரூபாயை பணத்தை காரில் வைத்துவிட்டு அவர் சென்றுள்ளார்.

அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து விட்டு கார் அருகே வந்த ஸ்ரீதர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து கணவன் மனைவி இருவரும் ஓசூர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
தெரு விளக்குகள் இல்லாததால் தொழிலாளர்கள் பாதிப்பு

தெரு விளக்குகள் இல்லாததால் தொழிலாளர்கள் பாதிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏற்கெனவே ஆர்டர் செய்த SOFA தான் - திருமாவளவன் விளக்கம்

5
12 mins agoshare
திருமாவளவன் விளக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved