Also Watch
Read this
By: Manigandan Raja

தொழிலாளர்கள் அங்கேயே இருந்து நீதிமன்றம் மூலமாக தற்போது வரை போராடி வருகின்றனர் :
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 2028 -ம் ஆண்டு வரை ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதன் உற்பத்தியை நிறுத்தியது.
இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு எட்டேட்டை விட்டு கீழே வந்தாலும் சில தொழிலாளர்கள் அங்கேயே இருந்து நீதிமன்றம் மூலமாக தற்போது வரை போராடி வருகின்றனர்.
இதற்கிடையில் அப்பகுதிகளில் இயங்கி வந்த ரேஷன் கடை, தபால் நிலையம் உள்ளிட்டவை மூடப்பட்டன. மேலும் பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு ஒரு முறை எனக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பகுதிகளில் பலமுறை பருவமழை, சூறைக்காற்று உள்ளிட்டவற்றால் மின்சாரம் தடைப்படும் நிலையில், ஊத்து பகுதியில் விளையாட்டு மைதானம் எதிரே உள்ள பகுதியில் தெருவிளக்கை மணிமுத்தாறு பேரூராட்சி ஊழியர்கள் கழற்சிக் கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து தற்போது வரை தெரு விளக்குகள் பொருத்தப்படாததால் அப்பகுதி முழுவதுமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இயற்கை இடர்பாடுகளால் பெரும்பாலான நேரங்களில் இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டு வரும் நிலையில், தற்போது அரசின் நடவடிக்கையால் தடைபட்டுள்ளது, இச்சம்பவத்தால் அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved