Also Watch
Read this
By: Manigandan Raja

ஐபிஎல் கிரிக்கெட்டில் 9-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி :
ஐபிஎல் போட்டியில் தனது 9-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டியவர் என்கிற கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்தார்.
கிறிஸ் கெயில், 423 போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்களை கடந்திருந்த நிலையில், விராட் கோலி 409 போட்டிகளிலேயே இந்த இலக்கை கடந்ததால், மிகக் குறைந்த இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்கிற சாதனையை படைத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மெக்னில் நரோனா :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக வெளியேறிய ராமகிருஷ்ணா கோஷுக்கு பதிலாக மெக்னில் நரோனா அணியில் இடம்பிடித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த ஆல் ரவுண்டரான மெக்னில் நரோனோ, சி.கே.நாயுடு கோப்பைக்கான தொடரில் அதிக ரன்கள் அடித்து நமன் விருது பெற்றவர்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ராமகிருஷ்ணா கோஷ், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.
சென்னை அணி வீரர் ஜேமி ஓவர்டனுக்கு வலது தொடையில் காயம் :

சென்னை அணி வீரர் ஜேமி ஓவர்டனுக்கு வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பரிசோதனை செய்ய இங்கிலாந்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரரான ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ODI, T-20 போட்டிகளில் வைபவ் விளையாட வேண்டும் :

15 வயதே ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்சி சர்வதேச ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட வேண்டும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். இந்த இளம் வயதில் வைபவின் ஆட்டம் வியக்கத்தக்க வகையில் உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
2ஆம் சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேற்றம் :
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் தைவானின் டுங் சியோ டாங்-ஐ((Tung Ciou-Tong)) எதிர் கொண்ட பி.வி.சிந்து, 21-க்கு 9 மற்றும் 21-க்கு 12 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved