news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஏடிஎம் மையத்தில் இஸ்லாமிய பெண்ணை தாக்கிய இளைஞர்
tv

Also Watch

tv

Read this

ஏடிஎம் மையத்தில் இஸ்லாமிய பெண்ணை தாக்கிய இளைஞர்

திருவண்ணாமலை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இஸ்லாமிய பெண்ணை தாக்கிய இளைஞர்

இஸ்லாமிய பெண்ணை தாக்கிய இளைஞர் : 

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு 4 -வது தெருவை சேர்ந்தவர் சஹானா. இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக
பணியாற்றி வருகிறார்.

கடந்த 7-ம் தேதி பிற்பகல் 01:30 மணி அளவில் போளூர் சாலையில் ராமகிருஷ்ணா உணவகம் அருகே உள்ள (யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா) ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். இவர் உள்ளே சென்றவுடன் ஏடிஎம் கதவை திறந்து கொண்டு மற்றொரு இளைஞர் உள்ளே சென்றுள்ளார்.

அதனை கண்டு கொள்ளாத சஹானா ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இளைஞர் உடனடியாக கிளம்பி போ நான் பணம் எடுக்க வேண்டும்
என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு சகானா இன்னும் சிறிது நேரத்தில் எனது பணம் வந்தவுடன் நான் வெளியே செல்கிறேன் என்று பதில் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளைஞர் அந்த பெண்ணை ஆபாசமான வார்த்தைகளிலும் ஒருமையிலும் பேசியதால் அதிர்ச்சி அடைந்த பெண் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல முயற்சித்த போது அந்த இளைஞர் பெண்ணை மீண்டும் ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது செய்வதறியாத அந்த பெண் அவரிடம் மீண்டும் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டபோது அந்த இளைஞர் அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞரை தடுக்க முயற்சித்த பொழுது அந்த இளைஞர் அந்தப் பெண்ணை தக்கி முகத்தில்
போடப்பட்டிருந்த துணியை (ஹிஜாப்) அகற்றி தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த சஹானா உடனடியாக 100-ஐ தொடர்பு கொண்டு பின்னர் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் அன்றைய தினமே புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தப்பி ஓடிய இளைஞரை தேடி வந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட
வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த அவினாஷ் என்பவரை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பட்டப் பகலில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற இஸ்லாமிய பெண்ணின் முகத்தில் போடப்பட்டிருந்த துணியை அகற்றி இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவத்திற்கான வீடியோ தற்பொழுது வெளியாகி திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
நாய், பூனைகளை கொ*ற கணவன் மனைவி மீது வழக்குப் பதிவு

நாய், பூனைகளை கொ*ற கணவன் மனைவி மீது வழக்குப் பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரிக்கை

0
2 mins agoshare
டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரிக்கை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved