தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, கோமதி அம்பாள் தவக்கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து, சுவாமி சங்கரநாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தபசு பந்தலை அடைந்தார். தொடர்ந்து, ஆடித்தபசு காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.