பருத்திவீரன் திரைப்பட நடிகர் சரவணன் கொலை மிரட்டல் விடுப்பதாக, அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சூர்யஸ்ரீ, ஸ்ரீதேவி என 2 பேரை திருமணம் செய்த நடிகர் சரவணன், மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வந்தார். சமீபகாலமாக, 2-ஆவது மனைவி ஸ்ரீதேவியுடன் வசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த சூழலில்தான், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் சரவணனும், 2-ஆவது மனைவி ஸ்ரீதேவியும் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார்.