சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் அரை மணி நேரமாக பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கண்ணமங்கலப்பட்டி,பிரான்மலை, காளாப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இரவில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால், கடலை, பருத்தி, வெண்டை, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட கோடை பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.