Also Watch
Read this
Posted on: Oct 16, 2025 09:03 AM
By: Web Team

மதுரை, கீரைத்துறை அருகே புது மாகாளிபட்டியில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏடிஎம் இயந்திரமும் அதில் இருந்த பணமும் முற்றிலும் எரிந்து கருகின. மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், ஏடிஎம் மையம் எரிய தொடங்கியவுடன் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீபாவளியையொட்டி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் வந்து தீணை அணைப்பதற்குள் மளமளவென பற்றியதில் அனைத்தும் எரிந்தன.
இந்த தீ விபத்து குறித்து, கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved