தேனி மாவட்டம் கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் வெள்ளத்தால் சேதமடைந்த துணை மின் நிலையத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இந்த துணை மின் நிலையம், கடந்த வாரம் முல்லைபெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டது. சேதமடைந்த கட்டடங்கள், இயந்திரங்களை பார்வையிட்ட தங்க தமிழ்ச்செல்வன், சீரமைப்பதற்கான பணிகளை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவால் திடீர் தீ