ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டின் கதவு, ஜன்னல்கள் அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பள்ளியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், சுடு தண்ணீர் வைப்பதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது சிலிண்டரில் திடீரென பற்றிய தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், சிலிண்டரை வெளியே எடுத்து தீ அணைக்கப்பட்டது.