சேலம் அருகே நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு நேரில் சென்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி திமுக அரசு போலி நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும், விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியாவதாகவும் வேதனை தெரிவித்தார்.