சிவகங்கை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூபாய் 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசியாபுரம் கிராமத்தை சேர்ந்த வசந்த் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்காக கொந்தகை வருவாய் ஆய்வாளர் முத்து முருகன் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து போலீசாரின் அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய பணத்தை வசந்த், வருவாய் ஆய்வாளரிடம் வழங்கியபோது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்