ரயில் விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டிய மீட்பு பணிகள் குறித்து, திருச்சி பொன்மலை குட்செட் யார்டில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் சிறப்பு ரயில், திருச்சி அருகே சென்ற போது விபத்து ஏற்பட்டதை போன்றும், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்தும் தத்ரூபமாக ஒத்திகை செய்து காட்டப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழு, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை, ரயில்வே மீட்புத்துறையினர் இணைந்து நடத்திய ஒத்திகையில், 4 பேர் உயிரிழந்தது போன்றும், படுகாயமடைந்தவர்களை மீட்பது போலவும் செய்து காட்டப்பட்டது.