news-tamil-logo

3/15/2026, 4:56:03 PM

news-tamil-logo
more
Home districtnews பேரக்குழந்தைகளுடன் சென்ற முதியவரை அவமதித்த அதிகாரி?
tv

Also Watch

tv

Read this

பேரக்குழந்தைகளுடன் சென்ற முதியவரை அவமதித்த அதிகாரி?

சதுப்பேரி, வேலூர்

Posted on: Mar 15, 2026 01:55 PM

2

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Issue

அவமதித்த அதிகாரி?

வேலூர் அடுத்த சதுப்பேரி ஏரி சுமார் 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா, நடைபாதை, படகு குழாம் என சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட்டு கடந்த 13.03.2026 அன்று மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் பூங்க திறந்த மறுநாள் (இன்று 14.03.2026) காலை 9:30 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த முதியவர் தனது பேர குழந்தைகளுடன் சதுப்பேரி ஏரி
பூங்காவுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கே இருந்த பொதுப்பணித்துறை அதிகாரி என கூறப்படும் நபர் முதியரை ஒருமையில் அவதுராக பேசி விரட்டும் காட்சி தற்போது சமுகவலைதளங்களில் பரவி கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அந்த வீடியோவில் பேசும் முதியவர், நேற்று திறந்த பூங்காவை பார்க்க ஆசையா குழந்தைகளை கூட்டினு வந்தேன். 10 மணிக்கு தான் உள்ளே அனுமதி என்கிறார்கள் ஆனால் உள்ளே பல குழந்தைகள் விளையாடிக்கொண்டுள்ளது, அதை கேட்டால் அசிங்கமா பேசுராங்க என கூறினார்.

முதியவரை அவமதித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அவர்களிடம் கேட்ட போது,
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமாரிடம் கேட்டபோது இது தவறுதலாக நடந்து இனி இதுபோன்று நடக்காது என கூறினார்.

Related Link
நகராட்சி பூங்கா இடத்தை முறைகேடாக விற்ற நபர்கள்

நகராட்சி பூங்கா இடத்தை முறைகேடாக விற்ற நபர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
2 hrs 25 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved