Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 02:22 PM
By: Manigandan Raja

இந்தி பெயர்களை அழித்த மர்ம நபர்கள் :
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பெயர்ப்பலகையில் திருத்துறைப்பூண்டி சந்திப்பு என்ற பெயர் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில்.
நேற்று இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத சிலர் ரயில் நிலையத்திற்கு வந்து அந்த பெயர்ப்பலகையில் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை மட்டும் கருப்பு மையால் அழித்துள்ளனர். காலை பணிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் பெயர்ப்பலகையில் ஹிந்தி எழுத்துகள் மட்டும் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவம் குறித்து உடனடியாக தகவல் அளித்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி ரயில் நிலைய மேலாளர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு
பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளை மட்டும் குறிவைத்து கருப்பு மையால் அழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved