news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சாய்ந்து சேதம்
tv

Also Watch

tv

Read this

அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சாய்ந்து சேதம்

எரசக்கநாயக்கனூர், தேனி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தேனி வாழைத்தோப்பு

வாழைகள் சாய்ந்து சேதம் : 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா எரசக்கநாயக்கனூர் பகுதியில் விவசாயிகள் பரவலாக செவ்வாழை, நேந்தரம், நாழிப்பூவன் விவசாயம் செய்து வரும் சூழலில் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை மற்றும் நேந்திரம் வாலைகள் நேற்று பெய்த சூறைக்காற்று மழையுடன் சாய்ந்து விட்டதால் ஒரு லட்ச வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றன. 

கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் செலவு செய்து தங்களுக்கு நஷ்டம் மட்டுமே மிஞ்சு உள்ளதாகவும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி கூறுகையில் கடன் வாங்கி வீட்டில் உள்ள நகையை அடகு வைத்து செவ்வாழை விவசாயம் செய்து வந்தேன்

ஒரு வாரத்திற்குள் அறுவடை செய்யக்கூடிய இந்த நேரத்தில் நேற்று திடீரென பெய்த சூறைக்காற்று மழையுடன் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழைகள் அனைத்தும் சாய்ந்து விட்டதாகவும் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதுள்ளதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார்.

தற்பொழுது கோடை காலம் என்பதால் செவ்வாழை கிலோ அறுபது ரூபாய் வரை விலை போவதால் ஒரு தார் பத்திலிருந்து 20 கிலோ வரை இருக்கும் கிட்டத்தட்ட 2000 செவ்வாழைக்கி 20 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி தெரிவிக்கிறார்.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Link
பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் உயிரிழப்பு

பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் உயிரிழப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 23 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved