Also Watch
Read this
By: Manigandan Raja

கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் :
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாதாந்திர சுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது.,
இக்கோவிலின் எதிர்சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்., முதலில் முருகன்,வள்ளி, தெய்வானை சிலைகள் கோவில் இருந்து எடுத்து வரப்பட்டு எழுமலை காவல் நிலையம் அருகில் உள்ள மண்டகப்படியில் நிலை நிறுத்தப்படும்.,
இதனைத் தொடர்ந்து எழுமலையில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் சாமி சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு எழுமலை ராஜா கணபதி ஆலயத்தில் நிலைநிறுத்தப்படுவார். அப்பொழுது அப்பகுதி மக்கள் இரண்டு தெய்வங்களையும் வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து மறுநாள் இந்த இரண்டு சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எழுமலை எல்லையில் உள்ள மண்டகப்படியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும் அப்பொழுது பக்தர்கள் நீரை பீய்ச்சியும் மஞ்சள் நீராடியும் கொண்டாடுவார்கள்.
இது போன்ற நிகழ்வுகள் காலங்காலமாக நடைபெற்று வந்தாலும் இந்த இந்த ஆண்டு ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் கோவிலின் பூசாரி கணேசன் என்பவர் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் திருமண நிகழ்வுகள் நடைபெறும் பொழுது ஜாதி அடிப்படையில் பாராபட்சம் பார்ப்பதாகவும் ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டி அவரை மாற்றக்கோரியும்.
மாதாந்திர சுப்ரமணியர் கோவில் பெயர் பலகையில் எழுமலை என்ற ஊருக்கு பதிலாக ஆத்தங்கரைபட்டி என்ற பெயரை மாற்றக் கோரியும் ஆத்தங்கரை பட்டி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
அவர்களிடம் பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி, உசிலம்பட்டி டிஎஸ்பி ஷண்முகசுந்தரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் கோவில் திருவிழாவை வழக்கம்போல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி எழுமலை மக்கள் எழுமலை காவல் நிலையம் முன்பு உசிலம்பட்டி- எழுமலை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
அவர்களிடமும் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியலால் எழுமலை- உசிலம்பட்டி சாலையில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved