news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிவேகமாக சென்ற மாவட்ட வன அலுவலர் கார் மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

அதிவேகமாக சென்ற மாவட்ட வன அலுவலர் கார் மோதி விபத்து

திருப்பத்தூர்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருப்பத்தூர் கார் விபத்து

மாவட்ட வன அலுவலர் கார் மோதி விபத்து : 

திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலராக மகேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய கார் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி பகுதியில் அதிவேகமாக வந்துள்ளது.

அப்போது எதிர் திசையில் இரு சக்கர வாகனத்தில் வந்திருந்த கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மணிவாசன் (30) மற்றும் அவரது மனைவி சாருமதி (23) மற்றும் குரும்பேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (20), மற்றும் அவரது மனைவி சந்தியா (20) உள்ளிட்ட நான்கு நபர்களுக்கும் இடுப்பு, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மலைவாசன் மனைவி சாருமதி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக வயிற்றில் உள்ள குழந்தைக்கு எவ்வித பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். கால் முறிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
10 hrs 16 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved