Also Watch
Read this
By: Manigandan Raja

தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் :
புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் 5ஆம் வீதியை சேர்ந்த காசி மகன் தன்ராஜ் (58) என்பவர் அவரது மனைவி மலர் என்பவர் உடன் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி பள்ளத்தா மனையில் நடைபெற உள்ள கிடாவெட்டு பூஜைக்கு செல்வதற்காக இன்று காலை கறம்பக்குடி உள் கடைவீதியில் உள்ள பூம்புகார் ஜவுளிக்கடை முன்பு.
இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள சரவணபவன் தனியார் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் பண்ணும் பொழுது என்ஜினில் இருந்து புகை
வந்துள்ளது.
புகை வருவதைக் கண்ட தம்பதியினர் இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர் சிறிது நேரத்தில் வாகனம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. தன்ராஜ் மற்றும் அவரது மனைவி மலர் இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கியதால் நல்வாய்ப்பாக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இருசக்கர வாகனம் தீப்பிடித்து எறிந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் தீயினை போராடி அணைத்தனர். ஆனால் இருசக்கர
வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமாயின.
கிடா வெட்டு பூஜைக்காக எடுத்துச் செல்லப்பட்ட இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved