Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 02:11 PM
By: Manigandan Raja

அடிப்படை கொள்கைகளை மாற்ற மாட்டோம் :
விழுப்புரம் அருகேயுள்ள கண்டாச்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்பு பிரச்சார பொதுக்கூட்டம் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய பாலகிருஷ்ணன் மற்ற கட்சியினர் பணம் கொடுத்து தான் கூட்டத்தை கூட்டுகிறார்கள். வாடகைக்கு ஆள் பிடித்து வந்து கூட்டம் நடத்தம்மாட்டோம்,பெரிய கட்சியாக இருப்பதைவிட ஆளும் கட்சி இல்லை, ஆண்ட கட்சி இல்லை.
ஆளுகிற கட்சிகள் சாதித்ததைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் மூலம் சாதித்தது அதிகம் என கூறினார். தூத்துக்குடியில் பள்ளி மாணவி இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது பிணமாக கிடந்துள்ளார் பெண்கள் தனியாக நடமாட முடியாத சூழலும்.
தமிழ்நாட்டில் சமூகம் சீர்கெட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாணவி காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தபோது காவல்துறை அதிகாரி புகாரை பெற்று விசாரித்திருந்தால் அந்த பெண்ணை உயிரோடு
பாதுகாத்திருக்க முடியும்.
புகார் தரும் பெற்றோரை தரக்குரைவாக பேசும் காவல் அதிகாரி என்ன அதிகாரி. சமூகத்தில் வன்முறை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்மை நாமே பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்றால் காவல்துறை, அரசுக்கு எதற்கு என கேள்வி எழுப்பினார்.
சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க வேண்டிய காவல்துறை ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார், காவல்துறை அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்காமல். கட்டுப்பாட்டை அவிழ்த்து விடுவது என்ன நியாயம் என்றும் தமிழ்நாட்டில் காவல்துறை கட்டுப்பாடில் உள்ளாத என்ற சந்தேகம் உள்ளதாகவும்.
இதற்கு முதல்வர் தான் பொறுப்பாக உள்ளார். முதல்வர் கையில் உள்ள துறை நியாயமாக செயல்பட வேண்டும் என கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved